கங்கனாவின் திரைப்படத்தைப் பார்த்து கண்கலங்கிய யோகி ஆதித்யநாத்!
பிரபல நடிகை கங்கனா ரணாவத்தின் தேஜஸ் படத்தினைப் பார்த்து உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சியில் கண்கலங்கியிருக்கிறார்.
தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எமர்ஜென்சி படத்தினை தானே தயாரித்து இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் நவ.24ஆம் நாள் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை: சினிமாவில் இருந்து விலகும் அல்போன்ஸ் புத்திரன்?
Advertisement
Advertisement
தமிழில் தலைவி என்ற இணையத் தொடருக்குப் பின் மீண்டும் களமிறங்கியுள்ளார். ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் நடிகை கங்கனாவும் நடித்துள்ளார். இந்தப் படம் மோசமான விமர்சனங்களை பெற்றன.
இதையும் படிக்க: டியர் அல்போன்ஸ் புத்திரன்... : வைரலாகும் சுதா கொங்கராவின் பதிவு!
கங்கனா நடித்துள்ள ‘தேஜஸ்’ படம் அக்.27ஆம் தேதி வெளியாகி படுதோல்வியென விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. இந்நிலையில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னௌவில் சிறப்புக் காட்சியாக தேஜஸ் படத்தினைப் பார்த்து நெகிழ்ச்சியில் கண் கலங்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம்: ரம்பா அதிரடி!
இது குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:
முதல்வர் யோகி ஆதித்யநாத் படம் பார்க்கும்போது கண்கலங்கிவிட்டார். எங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் இந்தப் படத்துடன் தொடர்புகொள்ள தேசப்பற்றுள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் உறுதியளித்துள்ளார். இது பெண்களின் முன்னேற்றத்துக்கான படமில்லை; பெண்களின் சக்தியை பற்றின படமாகும்” எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.