முகப்பு
செய்திகள்

ரத்தம் படத்தில் நகைச்சுவை இருக்குமா? தமிழ்ப்படம் 3 எப்போது?: இயக்குநர் சிஎஸ் அமுதனின் பதில்கள்!

தமிழ்ப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சிஎஸ் அமுதன் இயக்கியுள்ள ரத்தம் படத்தில் நகைச்சுவையே இருக்காதென கூறியுள்ளார். 

Updated On : 9 செப்டம்பர் 2023, 1:19 pm IST
பகிர்:

தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 எடுத்து தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சிஎஸ் அமுதன். அவர் இயக்கியுள்ள புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர்.  

இசை- கண்ணன் நாராயணன். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன். கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல், இரண்டாவது பாடல், இசை வெளியீட்டு விழா, இசை வெளியிட்டு விழாவில் சர்ச்சையான பேச்சு என சகலவிதமான தமிழ் சினிமாவின் போக்கினை கிண்டல் செய்து படம் செப்.28 அன்று ரிலீஸ் ஆகுமென விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் இயக்குநர் சிஎஸ் அமுதன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில் ரச்கர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அதில், “தமிழ்ப்படம் 3 இப்போதைக்கு எடுக்கமாட்டேன். ரத்தம் படத்தில் நகைச்சுவையே இல்லை. அரசியல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. பிடிக்குமென நினைக்கிறேன். தமிழ் சினிமா ரசிகர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நல்லப் படங்களை மக்கள் அங்கீகரிப்பார்கள்” எனக் கூறியுள்ளார். 

இன்று (செப்.9) மாலை 5 மணிக்கு டிரைலர் வெளியாக உள்ளது. இந்த டிரைலரை இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments