முகப்பு
செய்திகள்

திருமண வாழ்க்கையில் நுழைந்த வானத்தைப்போல தொடர் நடிகர்!

வானத்தைப்போல தொடர் நடிகருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Updated On : 20 செப்டம்பர் 2023, 7:22 pm IST
பகிர்:

வானத்தைப்போல தொடர் நடிகருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல தொடர் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர் அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

வானத்தைப்போல தொடர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கொண்டுள்ளது. இதனால் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் டாப் 5 தொடர்களில் ஒன்றாக உள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக இந்தத் தொடரில் இருந்து துளசியாக நடித்த ஸ்வேதா வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மான்யா நடித்து வருகிறார். இந்தத் தொடரில் சின்ராசுவாக நடித்த தமன் வெளியேறியதால், தற்போது ஸ்ரீ குமார் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் நடிகர் ராஜாபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும்  அஸ்வின் கார்த்தி நீண்டகாலமாக காயத்ரி எனபவரை காதலித்து வருகிறார்.  இவர் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வருகிறார்.

இவர்களின் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இவர்களுக்கு செப்.17 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்களை அஸ்வின் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது, அஸ்வின் கார்த்தியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியான நிலையில், அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments