முகப்பு
செய்திகள்

தொடர்ந்து முதலிடத்தில் எதிர்நீச்சல்: இந்த வார டிஆர்பி பட்டியல்!

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

Updated On : 30 செப்டம்பர் 2023, 9:52 am IST
பகிர்:

வெள்ளித்திரையைப் போலவே சின்னத்திரைக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது எனபதை டிஆர்பியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், முதல் 10 இடங்களை பிடித்த தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

Advertisement

Advertisement

எதிர் நீச்சல் தொடரின் முக்கிய கதாபாத்திரமாக கருதப்பட்ட மாரிமுத்து மறைவுக்குப் பிறகும் இந்த தொடர் 9.88 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளது.

கயல் தொடர் 9.61 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பல வாரங்களாக தக்கவைத்து கொண்டுள்ளது.  9.12 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, தொடர்ந்து 3வது இடத்தில் சுந்தரி தொடர் உள்ளது.

அதேபோல், வானத்தைப்போல தொடர் 8.95 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களே முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் 8.17 டிஆர்பி புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்ற வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த சன் டிவியின் இனியா தொடர் 8.16 டிஆர்பி புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

மிஸ்டர் மனைவி தொடர் 7.86 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 7வது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. பாக்கியலட்சுமி தொடர் 7.65 டிஆர்பி புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. சென்ற வாரம் 10ம் இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 6.70 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 9வது இடத்தில் உள்ளது.

கடந்த வார பட்டியலில் இல்லாத ஆனந்த ராகம் தொடர் 6.27 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 10வது இடத்தை பெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments