ஓடிடியில் ‘ஃபேமிலி ஸ்டார்’ எப்போது?
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ஃபேமிலி ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ஃபேமிலி ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் இந்தியா அளவில் டிரெண்டானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. ராஷ்மிகாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் கவனம் பெற்றன. அவரது நடிப்பில் சமந்தாவுடன் நடித்த குஷி திரைப்படம் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகிய படம் ஃபேமலி ஸ்டார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தத் திரைப்படம் கடந்த ஏப்ரல் 5ஆம் நாள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
இதுவரை ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் வரும் மே.3ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகுமென புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.