அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!
இயக்குநர் அட்லி நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், இந்தியன் 2 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2022 ஆம் ஆண்டு புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோஹித்தைத் (29) திருமணம் செய்தார். ஆனால், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஹித் போக்சோ வழக்கில் கைதானார். தொடர்ந்து, அவரை விவாகரத்து செய்த ஐஸ்வர்யா, ஷங்கர் வீட்டில் வசித்து வந்தார்.
ஐஸ்வர்யாவுக்கும் ஷங்கரின் துணை இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்தம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
டிரம்ஸ் சிவமணியின் வாசிக்க, ரன்வீர் சிங் மேடையில் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தார். அவருடன், மணமக்கள், ஷங்கரின் இரண்டாவது மகளும் நடிகையுமான அதிதி, இயக்குநர் அட்லி உள்ளிட்டோரும் நடனமாடினர்.
தற்போது அட்லி நடனமாடிய விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.