முகப்பு
செய்திகள்

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

தக் லைஃப் படத்தில் பாலிவுட் நடிகர்கள் இணைந்துள்ளனர்.

Updated On : 30 ஏப்ரல் 2024, 3:41 pm IST
பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் (இடமிருந்து வலம்)
பகிர்:

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. தற்போது, படத்தின் முக்கியக் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்கள் பங்கஜ் திரிபாதியும், அலி ஃபசல் இருவரும் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மிர்சாபூர் இணையத் தொடர் பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.