முகப்பு
செய்திகள்

விலங்கு வெப் தொடர் இயக்குநருடன் இணையும் நடிகர் சூரி!

நடிகர் சூரியின் புதிய படத்தின் அறிவிப்பு.

Updated On : 19 ஆகஸ்ட் 2024, 6:27 pm IST
நடிகர் சூரி - படம்: எக்ஸ்
பகிர்:

விலங்கு வெப் தொடர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூரி நடிக்கவுள்ளார்.

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து கருடன் படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் வெற்றிப்படமானதால், கதைநாயகனாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

அடுத்ததாக, இவர் நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் ஆக.23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இணையத் தொடரில் சூரி நாயகனாக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரியின் வெளியிட்டுள்ளப் பதிவில், “கருடன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் கே. குமாருடன் இணைகிறேன்.‌ இத்திரைப்படத்தை 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments