FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித்... பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் பிரபலங்கள்..!

நீதிபதி ஹேமா குழு அறிக்கை கேரளத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.

Updated On : 25 ஆகஸ்ட் 2024, 11:38 am IST
நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித்.
பகிர்:

மலையாள திரையுலகில் பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக நடிகர் சித்திக் மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். அதைத் தொடா்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறாா்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 போ் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது.

கடந்த 2019-இல் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிா்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக நேற்று (ஆக.24) குற்றம் சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்க தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டியுள்ளார்.

இது திரையுலகில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்துள்ளார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்து இயக்குநர் ரஞ்சித்தும் விலகியுள்ளார்.

மேலும், நடிகைகள் ஊர்வசி, பார்வதி திருவோத்து உள்ளிட்ட பல நடிகைகள், பாலியல் தொல்லை நடந்திருந்தால் தைரியமாக வெளியே சொல்லுங்கள் என சக நடிகைகளுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர். இன்னும் சில நாள்களில் மலையாள சினிமாவின் பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் பாலியல் புகார்களில் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments