முகப்பு
செய்திகள்

சப்தம் படத்தின் வெளியீட்டுத் தேதி!

நடிகர் ஆதியுடன் லட்சுமி மேனன் நடித்துள்ள சப்தம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Updated On : 25 டிசம்பர் 2024, 8:09 pm IST
பகிர்:

நடிகர் ஆதியுடன் லட்சுமி மேனன் நடித்துள்ள சப்தம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கி பிரபலமான அறிவழகன் சப்தம் எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில் தனது முதல்பட நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து சப்தம் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

மேலும், இப்படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்காக காத்திருந்தது.

இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் படம் வரும் பிப்.28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை லட்சுமி மேனனுக்கு இந்தப்படம் திருப்புமுனையை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.