செய்திகள்

வெளியானது ‘போர்’ படத்தின் டிரைலர்!

DIN

அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடித்துள்ள போர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடித்த ‘டேவிட்’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறியப்பட்டவர் இயக்குநர் பிஜோய் நம்பியார். பின்னர் துலகர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். நவரசா, காலா ஆகிய இணையத்தொடர்களையும் அவர்  இயக்கியுள்ளார். 

தற்போது அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமை வைத்து தமிழில் போர் என்றும், ஹர்ஸ்வர்தன் ரனே, ஈஹான் பட்டை வைத்து ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 

தமிழில் போர் என்றும் ஹிந்தியில் டங்கே எனவும் பெயரிடப்பட்டுள்ளது.  டி சீரிஸ் சார்பாக பூஷன் குமார் தயாரிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். 

இப்படம் மார்ச் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் டிரைலர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி சி.கே.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்

இன்றைய ராசி பலன்கள்!

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: எஸ்விஎன் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

யோகம் தரும் நாள் இன்று!

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT