முகப்பு
செய்திகள்

ஹிந்தி தெரியாது போயா... : கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டீசர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 12 ஜனவரி 2024, 2:55 pm IST
பகிர்:

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

தற்போது, கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்துள்ள படம் 'ரகு தாத்தா'. ஃபேமிலி மேன் எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் வசனங்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.