முகப்பு
செய்திகள்

நடிகர் பார்த்திபன் பாணியில் புதிய படத்தினை குறித்து பதிவிட்ட நிவேதா தாமஸ்!

நடிகை நிவேதா தாமஸ் தனது புதிய படம் குறித்து வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

Updated On : 11 ஜூலை, 2024 at 12:28 PM
நடிகை நிவேதா தாமஸ்
பகிர்:

நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக சாகினி டாகினி (தெலுங்கு), எந்தாடா சஜி (மலையாளம்) நல்ல வரவேற்பைப் பெற்றன.

35 சின்ன விஷயம் இல்ல போஸ்டர்

சமீபத்தில் தனது புதிய படத்தின் டீசரை வெளியிட்டார். ’35 சின்ன விஷயம் இல்ல’ என்ற இப்படத்தினை சுரேஷ் புரடக்‌ஷன்ஸ் உடன் மற்ற 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க நந்த கிஷோர் ஏமானி இயக்கியுள்ளார்.

நடிகர் ராணா டகுபதி இந்தப் படத்தினை வெளியிடவிருக்கிறார். கௌதமி, பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இது குறித்து நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:

காஃபியினை அருந்திக்கொண்டு நான் எப்போதாவது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செல்ஃபி புகைப்படம் எடுப்பேன். முதல், இரண்டாவது புகைப்படத்துக்கும் இடையில் உள்ள கணத்தில் ஒன்றை உணர்ந்தேன். இன்னும் எனது படம் வெளியாக 35 நாள்கள் இருக்கின்றன. சிறிய பெண்போல படம் பார்க்கும் ஆர்வத்தில் இருக்கிறேன். ‘35 சின்ன விஷயம் இல்ல’ என்ற படம் எனது முகத்தில் சிரிப்பினை வரவழைத்ததை இரண்டாவது புகைப்படத்தில் பார்க்கலாம்.

இருந்தும் இது சிறிய கதை இல்லையல்லாவா. நீங்கள் அனைவரும் இந்தப் படத்தினை பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன். இந்தப் படத்தினை எனது படம் என்பதில் நான் மிகவும் பெருமைகொள்கிறேன். 35 நாள்களுக்குப் பிறகு இது உங்கள் படமாகும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிலர் நடிகர், இயக்குநர் பார்த்திபன் பாணியில் நிவேதா பதிவிட்டுள்ளதாக கமெண்ட்டுகளில் கூறிவருகிறார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வரும் ஆக.15ஆம் நாள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் இயக்கத்தில் டீன்ஸ் திரைப்படம் ஜூலை 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.