FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை...

வரலாற்றில் முதல்முறையாக சன் டிவி தொடர்களை பின்னுக்குத்தள்ளி, விஜய் டிவி தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Updated On : 15 ஜூலை 2024, 4:39 pm IST
பகிர்:

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறையாக சன் தொலைக்காட்சித் தொடர்களை பின்னுக்குத்தள்ளி, விஜய் தொலைக்காட்சித் தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வாரந்தோறும் வெளியாகும் டிஆர்பி பட்டியலில் எப்போதும் சன் தொலைக்காட்சித் தொடர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது அந்த வரலாற்றை மாற்றியுள்ளது விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக அளவில் மக்களால் பார்க்கப்படும் தொடர் எவை என்பது குறித்து வாரமொருமுறை வெளியாகும் டிஆர்பி பட்டியல் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

Advertisement

அந்தவகையில் இந்த வாரத்துக்கான டிஆர்பி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் 8.38 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக சன் தொலைக்காட்சியின் சிங்கப் பெண்ணே தொடர், 8.27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இத்தொடரில் மணீஷா மகேஷ் நாயகியாக நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியின் கயல் தொடர் 8.08 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி நாயகியாகவும், சஞ்சீவ் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் மருமகள் தொடர் 7.89 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தில் உள்ளது. நடிகை கேப்ரியல்லா இத்தொடரில் நாயகியாக நடிக்கிறார்.

வானத்தைப் போல தொடர் 7.50 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. ராஜ் பிரபு எழுத, ஏ.ராமச்சந்திரன் இயக்கத்தில் இந்த தொடர் உருவாகி வருகிறது. அண்ணன் - தங்கை என்ற முதன்மை பாத்திரத்தில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த் நடிக்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடர் 7.12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. நடிகை சுசித்ரா, வேலு லட்சுமணன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் தொலைக்காட்சியின் மல்லி தொடர் 6.80 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. விமல் வெங்கடேசன், நிகிதா ராஜேஷ் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

8வது இடத்தில், 6.49 டிஆர்பி புள்ளிகளுடன் சுந்தரி தொடர் உள்ளது. இந்தத் தொடரில் கேப்ரியல்லா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜிஸ்னு மேனன் நடிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் 6.77 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. முதல் பாகம் அண்ணன் - தம்பிகள் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நிலையில், 2வது சீசன், அப்பா - மகன்கள் இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

10வது இடத்தில் 5.72 புள்ளிகளுடன் சின்ன மருமகள் தொடர் உள்ளது. இளம் வயது திருமணத்தை மையப்படுத்து எடுக்கப்பட்டு வரும் இத்தொடரில், ஸ்வேதா, நவின் குமார் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments