பிரியங்கா சோப்ரா பிறந்த நாளுக்கு கணவர் நிக் ஜோனாஸ் கூறியது என்ன?
நடிகை பிரியங்கா சோப்ரா பிறந்தநாளில் அவரது கணவர் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழன் திரைப்படம் மூலமாக 2002-இல் நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள், வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார்.
2018ஆம் ஆண்டு டிசம்பரில் பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
அமேசான் ஸ்டுடியோஸ் தயாரித்த சிட்டாடல் தொடரில் ப்ரியங்கா சோப்ரா, சமந்தா, ரிச்சார்ட் மேட்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூஸோ சகோதரர்கள் இயக்கும் எபிசோடில் சமந்தா, வருண் தவானும் நடிக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா இந்தத் தொடரில் முதன்மை கதாபத்திரமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
’தி பிளஃப்’ படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் என்ற ஹாலிவுட் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஜான் சீனா, இட்ரிஸ் எல்பா நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் பிரியங்காவின் 42ஆவது பிறந்தநாளில் அவரது கணவர் நிக் ஜோனாஸ் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார். அதில், “ நான் விரும்பிய பெண். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே” எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.