முகப்பு
செய்திகள்

ராஜமௌலி - மகேஷ் பாபு படம் குறித்து ராம்கோபால் வர்மா கூறியதென்ன?

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படம் குறித்து ராம் கோபால் வர்மா புகழ்ந்து பேசியுள்ளதாக தகவல்.

Updated On : 24 ஜூலை, 2024 at 4:15 PM
ராஜமௌலி - மகேஷ் பாபு
பகிர்:

ராஜமௌலி இயக்கிய ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இது மகேஷ் பாபுவின் 29ஆவது படம் எனக் கூறப்பட்டு வந்தது.

இந்தப் படம் அயன் பாணியில் உலகம் முழுக்க சுற்றும் இளைஞனின் கதை என முதலில் கூறப்பட்டது. பின்னர், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜமௌலி - மகேஷ் பாபு படம் உருவாகவுள்ளதாக ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார்.

இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக நவீன தொழில்நுட்பத்தில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில்  எடுக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

Advertisement

சமீபத்தில் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் இந்தப் படத்தினை நாங்கள் தயாரிக்கவில்லை என மறுத்து அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

இந்தப் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாயகனுக்கு இணையான கதாபாத்திரம் என்றும் இதற்கான ஒப்பந்தத்தில் பிருத்விராஜ் கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, “ராஜமௌலியின் அடுத்த படம் இதுவரை எடுக்கப்பட்டுள்ள எல்லா படங்களுக்கும் அப்பன் மாதிரி ஒரு படமாக உருவாகவிருக்கிறது” என்று கூறியதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் 1000 கோடி என்பதால் நடிகர் மகேஷ் பாபும் இதில் தயாரிப்பாளராக இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.