FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஐமேக்ஸில் மட்டுமே ரூ.500 கோடி வசூல்..! சாதனை படைத்த தி ஒடிசி!

கிறிஸ்டோபர் நோலனின் ’தி ஒடிசி’ திரைப்படம் ஐமேக்ஸில் வசூல் சாதனை படைத்துள்ளது குறித்து...

Updated On : 21 ஜூலை 2026, 9:12 pm IST
தி ஒடிசி போஸ்டர். - படம்: எக்ஸ் / தி ஒடிசி மூவி.
பகிர்:

கிறிஸ்டோபர் நோலனின் ’தி ஒடிசி’ திரைப்படம் ஐமேக்ஸில் மட்டுமே முதல் வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கிரேக்க காவியம் ஓமரின் ’தி ஒடிசி’ கவிதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் முழுக்க முழ்க்க ஐமேக்ஸ் காமிராவினால் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஐமேக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்ட தி ஒடிசி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவிலும் தமிழில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

முதல் வாரத்தில் ஐமேக்ஸ் திரைகளில் மட்டுமே இந்தப் படம் 52 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.500.84 கோடி வசூலித்துள்ளது. சீனா, ஜப்பான், தென் கொரியாவில் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஐமேக்ஸில் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14.6 கோடி) வசூலித்து அசத்தியுள்ளது. வட அமெரிக்காவில் 444 ஐமேக்ஸ் திரைகளில் திரையிடப்பட்ட இந்தப் படம் 29.6 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. உள்ளூர் பாக்ஸ் ஆபிஸில் 23.8 சதவிகிதம் இங்கு வசூலித்துள்ளது.

வெளிநாடுகளில் 441 ஐமேக்ஸ் திரைகளில் இந்தப் படம் 22.2 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலிய உள்பட 26 நாடுகளில் இந்தப் படம் ஐமேக்ஸ் வசூலில் அதிக பங்களிப்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மோர்டன், ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரான் நடித்துள்ளார்கள்.

summary

Christopher Nolan's 'The Odyssey' sets IMAX opening weekend record with USD 52 million

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments