FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறை... நஷ்ரா சந்து புதிய சாதனை!

பாகிஸ்தானின் சுழல் பந்து வீராங்கனை நஷ்ரா சந்து நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை குறித்து...

8 செப்டம்பர் 2026, 6:02 pm IST
நஷ்ரா சந்து போஸ்டர் - படம்: எக்ஸ் / ஏசியன் கிரிக்கெட் கவுன்சில்.
பகிர்:

பாகிஸ்தான் மகளிரணியின் சுழல் பந்து வீராங்கனை நஷ்ரா சந்து (28 வயது) டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறுச் சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் ஆடவர், மகளிர் கிரிக்கெட் டி20 வரலாற்றிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சை, அதாவது முதல்முறையாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.

மகளிருக்கான ஆசிய கோப்பை குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் பாகிஸ்தானும் ஹாங் காங் அணியும் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 143/8 ரன்கள் குவித்தது.

Advertisement

Advertisement

அடுத்து பேட்டிங் செய்த ஹாங் காங் அணி 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி, இலங்கையுடன் மோதவிருக்கிறது

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் இடதுகை சுழல் பந்து வீராங்கனை நஸ்ரா சந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். மொத்தமாக அவர் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே (ஆடவர், மகளிர் சேர்த்து) முதல்முறையாக இந்த சாதனையை நஸ்ரா சந்து படைத்துள்ளார். இதற்காக ஐசிசி அவரைப் பாராட்டி பதிவிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்காக சிறந்த டி20 பந்துவீச்சு பட்டியல்

1. நஸ்ரா சந்து - 6/7 (ஹாங் காங் எதிராக, 2026) (வீராங்கனை)*

2. சுஃபாயுன் மோஹிம் - 5/3 (ஜிம்பாப்வே எதிராக, 2024) (வீரர்)

3. உமர் குல் - 5/6 (நியூசிலாந்துக்கு எதிராக, 2009) (வீரர்)

= உமர் குல் - 5/6 (தெ.ஆ. எதிராக, 2013) (வீரர்)

5. ஒமைமா சோஹைல் - 5/13 (இலங்கைக்கு எதிராக, 2022) (வீராங்கனை) *

summary

A first in the history of Pakistan T20 cricket... Nashra Sandhu sets a new record!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments