பிறந்தநாள் பரிசு: விஜய் குரலில் 2-ஆவது பாடல்!
கோட் படத்தின் 2ஆவது பாடல் விஜய் குரலில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
கோட் படத்தின் 2ஆவது பாடல் விஜய் குரலில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ’கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சமீபத்தில் விஜய்யின் விஎஃப் காட்சிகள் நிறைவடைந்ததாக இயக்குநர் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே, விஜய் பாடிய முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இந்நிலையில் 2ஆவது பாடலையும் நடிகர் விஜய் பாடியுள்ளார். அதன் பெயர் சின்ன சின்ன கண்கள். இந்தப் பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜூன் 22) மாலை 6 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சி மக்களுக்கு உதவுமாறு தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.