முகப்பு
செய்திகள்

தேசிங்கு ராஜா - 2 படப்பிடிப்பு நிறைவு!

Updated On : 27 ஜூன், 2024 at 6:47 AM
பகிர்:

நடிகர் விமல் நடிப்பில் உருவாகும் தேசிங்கு ராஜா - 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்த புதியத்தொடரில் விமலுக்கு ஜோடியாக பாவ்னி மற்றும் திவ்யா துரைசாமி கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையே, இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான 2013-ல் வெளியாகி வெற்றிபெற்ற தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததைப் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments