மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை திரையரங்குகளில் காணத் தவறாதீர்கள்: கார்த்திக் சுப்புராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தினை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம்.
இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேரளத்தைச் சேர்ந்த மஞ்சுமெல் என்கிற பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.
அங்கு, குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கிக் கொள்கிறார். உடன் வந்த நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை. இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மஞ்சுமேல் பாய்ஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், கேரளத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் மஞ்சுமேல் பாய்ஸ் திரைக்காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி, நடிகர் தனுஷ் என பலரையும் படத்தின் இயக்குநர் சிதம்பரம் சந்தித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் இதில் இணைந்துள்ளார். இந்தப் படத்தினை திரையரங்குகளில் காணத் தவறாதீர்கள் எனக் கூறியுள்ளார். பின்னர் இயக்குநர் சிதம்பரம், எடிட்டரை சந்தித்து மை பாய்ஸ் எனக் குறிப்பிட்டு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.