முகப்பு
செய்திகள்

பிரேமலு தமிழ் டிரைலர்!

மலையாளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிரேமலு திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது.

Updated On : 13 மார்ச் 2024, 11:36 am IST
- DOTCOM
பகிர்:

நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரேமலு. தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்றைய கால கட்ட இளைஞர்களுக்கு நெருக்கமான கதைக்களத்தில் உருவான இப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான இப்படம் விரைவில் தமிழிலும் வெளியாக உள்ளது. இதற்கான, டப்பிங் பணிகள் முடிந்ததாகவும் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பிரேமலு தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments