படங்கள்: எக்ஸ்
செய்திகள்

பயணத்தில் பைக்கர்களுக்காக பிரியாணி சமைத்த அஜித்!

நடிகர் அஜித்குமார் பைக் பயணத்தில் சக பைக்கர்களுக்காக பிரியாணி சமைத்துள்ள விடியோ கவனம் ஈர்த்துள்ளது.

DIN

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இதற்கிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட அஜித் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார்.

இருசக்கர வாகனத்தில் உலகைச் சுற்றும் திட்டத்தின் ஒருபகுதியாக மீண்டும் தன் பயணத்தைத் துவங்கியுள்ளதாக சமீபத்தில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

நேற்று சுரேஷ் சந்திரா தனது பக்கத்தில் புதிய விடியோவினை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் அஜித் ரசிகர் ஒருவருக்கு எப்படி பைக் ஓட்ட வேண்டுமென கற்றுத் தரும் விடியோ டிரெண்டானது.

இந்த நிலையில், சக பைக்கர்களுக்காக பிரியாணி சமைத்து கொடுக்கும் அஜித்தின் விடியோ வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக வெளிநாடு செல்லும் போப் 14-ம் லியோ!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

டூட் டிரைலர் தேதி!

பாலிவுட் வாசம்... சான்யா!

ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் அபிஷேக் சர்மா!

SCROLL FOR NEXT