ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய ‘ஆர்டிகள் 370’ திரைப்படம்!
நடிகை யாமி கௌதம் நடிப்பில் வெளியாகியுள்ள ஆர்டிகள் 370 திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
ஹிமாசலில் பிறந்த நடிகை யாமி கௌதம் முதலில் மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் முழுநேர நடியாக இருந்து வருகிறார். தனது முதல் ஹிந்தி படமான விக்கி டோனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
தமிழில் 2013இல் கௌரம் எனும் படத்திலும் 2016இல் ஜெய் உடன் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பெரிதாக ஹிட் அடிக்காத இவரது படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. யாமி கௌதம், ப்ரியா மணி இணைந்து இதில் நடித்துள்ளார்கள்.
பாஜக அரசுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிக்கவே இந்தப் படம் உருவாக்கப்பட்டதாக சர்சை எழுந்தது. பின்னர் இயக்கநர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து ஆர்டிகள் 370 திரைப்படம் பிப்.23ஆம் தேதி வெளியாகியது. இந்தப் படத்தினை தயாரித்தது யாமி கௌதமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் இன்று வரை ரூ.106.40 கோடி வசூலித்துள்ளது. இதில் யாமி கௌதமின் சண்டைக் காட்சிகள் பெரிதும் கவனம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.