சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கிறார்.
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார்.
முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சூர்யாவின் 44வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘லவ் லாஃப்டர் வார்' என்ற வகைமையில் படம் உருவாக உள்ளதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், “புதிய தொடக்கம், உங்களது நல்லாசிகள் தேவை” எனக் கூறியுள்ளார்.