முகப்பு
செய்திகள்

கல்கி - புஜ்ஜி டீசர்!

கல்கி திரைப்படத்தில் இடம்பெற்ற புஜ்ஜி கதாபாத்திரத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 23 மே, 2024 at 11:36 AM
பகிர்:

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்  'கல்கி 2898 ஏடி'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 

ரூ.600 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

முன்னதாக 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டதுடன் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் முதல் பாகத்தில் 20 நிமிடங்களும் இரண்டாம் பாகத்தில் 90 நிமிடங்களும் வருகிறாராம். இதனால், இப்படத்தின் வில்லன் கமல்ஹாசனாகத்தான் இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரோபோ கதாபாத்திரமான புஜ்ஜியின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. புஜ்ஜிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். ரோபோவுடன் நடிகர் பிரபாஸ் நடத்தும் உரையாடல்கள் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →