கங்குவாவைப் பார்த்து மிரண்டு போவார்கள்: சூர்யா
கங்குவா படம் குறித்து சூர்யா பெருமையாக பேசியுள்ளார்..
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
கங்குவா திரைப்படம் நவ. 14 ஆம் தேதி வெளியாவதால் நடிகர் சூர்யா படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று, சென்னையில் படத்தின் 3டி டிரைலர் வெளியீட்டு விழாவில் கங்குவா குழுவுடன் சூர்யா கலந்துகொண்டார்.
நிகழ்வில் பேசிய சூர்யா, “தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இல்லையென்றால் கங்குவா திரைப்படம் நிகழ்ந்திருக்காது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் அழகாக இருந்தது. கிட்டத்தட்ட 170 நாள்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு கனவுபோல் உருவானது. பணத்தைத் தாண்டி முழு ஈடுபாடுடன் மொத்த குழுவும் உழைத்திருக்கிறோம்.
Advertisement
Advertisement
ஒளிப்பதிவாளர் வெற்றி கங்குவாவின் தரத்தை எங்கோ கொண்டு சென்றுவிட்டார். இந்திய சினிமாவிலிருக்கும் படைப்பாளிகளும் இயக்குநர்களும் ஒளிப்பதிவைப் பார்த்து மிரண்டு போவார்கள். மிக பணிவாகவே இதைச் சொல்கிறேன்.
இதையும் படிக்க: அபூர்வ வைரமே... தந்தையை வாழ்த்திய ஸ்ருதி ஹாசன்!
படத்தைப் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர், இயக்குநர் கரண் ஜோஹர் இது எப்படி சாத்தியமானது என ஆச்சரியப்பட்டார். இதற்கு முன், இப்படியொரு திரையரங்க அனுபவத்தைக் கண்டிருக்க மாட்டீர்கள். 700 ஆண்டுகளுக்கு முந்தைய கதையான இது வெறும் சண்டைப்படமாக மட்டும் உருவாகவில்லை. ஒருவனுக்குள் இருக்கும் அகமும் புறமும் பேசப்பட்டிருக்கிறது. மன்னிப்பை பிரதானமாக வைத்திருக்கிறோம்.
ஒருத்தர் உண்மையாக வேலை செய்தாலே பலன் கிடைக்கும்போது கங்குவாவிற்கு 3000 பேர் வேலை செய்திருக்கின்றனர். மீண்டும் சொல்கிறேன், படம் நெருப்பு மாதிரி இருக்கும்” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.