சூர்யா விஜய் சேதுபதி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!
பீனிக்ஸ் படத்தின் வெளியீட்டில் மாற்றம்...
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் அறிமுகமாகும் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி மகாராஜா திரைபடத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் ‘பீனிக்ஸ் - வீழான்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திலிருந்து சூர்யா சேதுபதி என்கிற பெயரில் திரைத்துறைக்கு வருகிறார்.
Advertisement
Advertisement
இப்படம் கங்குவாவுடன் நவ. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.