தயாராகிறது 96 - 2!
96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்து...
96 படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார்.
96 படத்தைப்போல மனித உறவுகளை அழகாகக் கையாண்ட திரைப்படமாக மெய்யழகன் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 புரமோ படப்பிடிப்பு பணிகள் துவக்கம்?
இப்படத்தைத் தொடர்ந்து, பிரேம் குமார் அடுத்ததாக இயக்கும் படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி - த்ரிஷாவை வைத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை பிரேம் குமார் எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.