மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி?
ரஜினிகாந்த் - மணிரத்னம் படம் குறித்து....
ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாகத் தகவல்.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்குப் பின் கூலி படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சில நாள்களுக்கு முன் ரஜினிக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அக். 10 ஆம் தேதிக்கு மேல் ரஜினி கூலி படப்பிடிப்பில் இணைவார் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மெய்யழகன் - அண்ணனும் அண்ணியும் இதைத்தான் சொன்னார்கள்: கார்த்தி!
அதேநேரம், இயக்குநர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை எடுத்து முடித்துள்ளார். படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணி இணைய உள்ளதாகவும் படத்தின் அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிச. 12 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி படத்திற்குப் பின் இக்கூட்டணி மீண்டும் இணையுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.