நிமேஷிகா இன்ஸ்டாகிராம்
செய்திகள்

ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மாறான நேரத்தில் ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

கண்ணான கண்ணே தொடரில் நடித்து புகழ் பெற்ற நிமேஷிகாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிப்பு.

DIN

கண்ணான கண்ணே தொடரில் நடித்து புகழ் பெற்ற நிமேஷிகாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் நிமேஷிகாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகிறது என்ற அறிவிப்பால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒளிபரப்பு நேரம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று டிஆர்பி பட்டியலிலும் முன்னிலை வகிக்கின்றன. அந்தவகையில், நிமேஷிகா முதன்மை பாத்திரத்தில் நடித்த கண்ணான கண்ணே தொடரும் டிஆர்பியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

2020 முதல் ஒளிபரப்பான கண்ணான கண்ணே தொடர் 2023 நவம்பர் வரை 720 எபிஸோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பானது. மக்களிடம் முகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் தொடரை தனுஷ் இயக்கினார். (இவர் தற்போது சிங்கப் பெண்ணே தொடரை இயக்குகிறார்)

இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சீரியலிலிருந்து விலகிய நடிகர்கள்!

கண்ணான கண்ணே தொடருக்குப் பிறகு நிமேஷிகா தற்போது புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இதற்கு புனிதா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முன்னோட்டக் (புரோமோ) காட்சிகள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. நிமேஷிகா மீண்டும் நடிப்பதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

தற்போது புனிதா தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புனிதா தொடர் ஒளிபரப்பு நேரம்

இதையும் படிக்க | திருமண வாழ்க்கையில் நுழைந்த சுந்தரி தொடர் நடிகை!

பிற்பகல் 3 மணிக்கு நிமேஷிகாவின் தொடர் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் பலர் எதிர்பார்த்தனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், நேரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருக்குறளை வீடு, வீடாகக் கொண்டு செல்ல வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

திருவாரூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் கடத்திய 4,506 போ் கைது

எஸ்.வேலங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு

திமுக கூட்டணி பலமாக உள்ளது: காதா் மொய்தீன்

இந்திரா டிரெய்லர்!

SCROLL FOR NEXT