சைக்கோ கொலையாளியாக விக்ராந்த் மாஸ்ஸி! செக்டர் 36 டிரைலர்!
பிரபல ஹிந்தி நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் உருவாகியுள்ள செக்டர் 36 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விக்ராந்த் மாஸ்ஸி தொலைக்காட்சிகளில் நடித்து சினிமாவுக்கு வந்தவர். 2013இல் அறிமுகமான இவரது லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, சாப்பக், மும்பைக்கர் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
கடைசியாக விக்ராந்த் மெஸ்ஸி நடிப்பில் திரையரங்கில் வெளியான டுவெல்த் ஃபெயில் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
சமீபத்தில் நடிகை டாப்ஸியுடன் பிர் ஆயி ஹசீன் தில்ரூபா என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியானது.
Advertisement
Advertisement
இந்நிலையில் செக்டர் 36 என்ற புதிய படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்துள்ளார். ஆதித்யா நிம்பால்கர் இயக்கியுள்ள இந்தப் படத்த மட்டோக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி சைக்கோ கொலையாளியாக நடித்துள்ளார். இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் செப்.13ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ஆகஸ்ட் மாதம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.