முகப்பு
செய்திகள்

இப்படியொரு பெயரா? தனுஷ் இயக்கும் புதிய படம் அறிவிப்பு!

நடிகர் தனுஷின் புதிய படம்...

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:36 AM
நடிகர் தனுஷ்
பகிர்:

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் ரசிகர்களிடம் வைரலானது.

இந்த நிலையில், தனுஷ் இயக்கும் 4-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கிறார். படத்திற்கு ’இட்லி கடை’ எனப் பெயரிட்டுள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

மேலும், இதில் நடிகர்கள் அருண் விஜய், நித்யா மேனன், அசோக் செல்வன் இணைந்துள்ளதாகத் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.