மிருணாளினி ரவியின் புதிய வீடு.  படங்கள்: இன்ஸ்டா / மிருணாளினி ரவி
செய்திகள்

மொழி இல்லம்... கனவு நிறைவேறியது..! மிருணாளினி ரவி நெகிழ்ச்சி!

நடிகை மிருணாளினி ரவி தனது அம்மா பெயரில் புதிய வீட்டைக்கட்டி முடித்துள்ளார்.

DIN

டிக் டாக், டப் ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. தியாகராஜா குமாராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சினிமாவில் அறிமுகமானார்.

எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

கடைசியாக தமிழில் ரோமியோ படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

29 வயதாகும் மிருணாளினி ரவி, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது அம்மாவின் பெயரில் புதிய வீடு ஒன்றினை கட்டியிருப்பது குறித்து புகைப்படங்களுடன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மொழி இல்லம்

அதற்காக மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

எனது சிறுவயதில், எனது அப்பா வீடு கட்டி அவரது அம்மாவின் பெயரினை வைத்தார். அப்போதிலிருந்து எனக்கும் எனது அம்மா பெயரில் வீடு கட்ட வேண்டுமென கனவு இருந்தது.

தற்போது, எனது கனவு நிறைவேறிவிட்டது. உங்களது ஆதரவும் ஆசிர்வாதங்களுமின்றி இதெல்லாம் நடந்திருக்காது. இதை நிகழ்த்த என்னை ஊக்கப்படுத்தியவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT