அசோக் செல்வனின் புதிய படம்!
பெண் இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் நடிகர் அசோக் செல்வன்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நடிகை கீர்த்தி பாண்டியனைத் திருமணம் செய்த அசோக் செல்வன் நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘கண்ட நாள் முதல்’ படத்தின் இயக்குநரான பிரியா இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘பொன் ஒன்று கண்டேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.