விஸ்வரூபம் - சிறப்பு டீசரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
விஸ்வரூபம் திரைப்படம் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்த விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இஸ்லாமிய மதத்தை புண்படுத்தியதாக பெரிய பிரச்னைகளைச் சந்தித்ததுடன் அரசியல் ரீதியான சிக்கலையும் எதிர்கொண்டது. இதனால், மனமுடைந்த நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் தமிழகத்தில் வெளியாகவில்லை என்றால் நாட்டை விட்டு சென்றுவிடுவதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பெரும் போராட்டத்திற்குப் 2013 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஆப்கானிஸ்தானில் நடப்பதுபோன்ற காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தன. தமிழில் உருவான சிறந்த தொழில்நுட்பப் படமாக விஸ்வரூபம் கருதப்படுகிறது. முக்கியமாக, பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்தை சிறப்பாகக் கையாண்டிந்தார் கமல்ஹாசன்.
இதையும் படிக்க: நடிகர் ரஜினிக்கு நன்றி தெரிவித்த விஜய்!
Advertisement
Advertisement
இந்நிலையில், இப்படம் வெளியாகி 11 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சிறப்பு டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.