இன்றைய செய்திகள் ஜூலை 22 - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
நீட் தேர்வு ரத்தே நிரந்த தீர்வு: மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!
நடப்பாண்டில் கடந்த இரண்டு மாதங்களில் மாருதி நிறுவனம் 2-வது முறையாக கார்களின் விலையை உயர்த்தியுள்ளதால், கார் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலை? (ஜூலை 22)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 22) சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: தவெக
தலைநகர் தில்லியில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தவெக தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
முன்னாள்கள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், கே.ஆர். பெரியகருப்பன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வருகின்றன.
இளைஞர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்
நீட் தேர்வு, வினாத் தாள் கசிவு உள்பட அனைத்து விவகாரங்களிலும் இளைஞர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.