முகப்பு
செய்திகள்

பிரேமலு பிரபலங்கள் நிறைந்த 'ப்ரோமான்ஸ்'-ன் ஓடிடி வெளியீடு!

’ப்ரோமான்ஸ்’-ன் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...

Updated On : 30 ஏப்ரல் 2025, 8:09 pm IST
ப்ரோமான்ஸ் திரைப்படம்....
பகிர்:

'ப்ரோமான்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் அருண் டி. ஜோஸ் இயக்கத்தில் நடிகர்கள் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோஹன் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோரின் நடிப்பில் உருவான மலையாளத் திரைப்படம் ‘ப்ரோமான்ஸ்’.

காணாமல் போன சகோதரனைக் கண்டுபிடிக்க 3 இளைஞர்கள் இணையும் நகைச்சுவையான கதைக்களத்தைக் கொண்ட இப்படம் பிப்.14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.

Advertisement

Advertisement

கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்த ‘பிரேமலு’ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ் மற்றும் ஷியாம் மோஹன் மீண்டும் இணைந்த இந்தப் படமும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்தத் திரைப்படம் உழைப்பாளர் தினமான நாளை (மே.1) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒசகா திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக அஜித், லியோ படத்துக்கு 6 விருதுகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments