எஸ்டிஆர் 49! மீண்டும் சிம்பு - சந்தானம் கூட்டணி!
நடிகர் சிலம்பரசனின் 49 ஆவது படத்தில் காமெடியனாக நடிகர் சந்தானம் இணைந்திருப்பதாக படக்குழு அறிவிப்பு
நடிகர் சிலம்பரசனின் 49 ஆவது படத்தில் காமெடியனாக நடிகர் சந்தானம் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, படக்குழுவின் எக்ஸ் பக்கத்தில், நீண்ட காலமாகக் காத்துக் கொண்டிருந்த கூட்டணி, மீண்டும் இணைவதாகக் கூறி பதிவிட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, தான் நடிக்கும் படங்களின் நாயகனாக மட்டுமே நடித்து வரும் சந்தானம், மீண்டும் காமெடியனாக உருவெடுக்கிறார். சந்தானத்தை திரையில் அறிமுகப்படுத்தியது சிலம்பரசன் என்பதும் குறிப்பிடத்தக்கது/
Advertisement
Advertisement
’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தினை இயக்குகிறார். நடிகை கயாது லோஹரும் இணைந்துள்ள இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே வெளியீட்டு தேதி எப்போது?