சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்து...
ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் பூஜை, படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய விடியோவை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
Advertisement
Advertisement
லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, தமன் இசையமைக்கிறார்.
ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்தப் படத்தின் பெயர் ’சிக்மா’ என அறிவிக்கப்பட்ட நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் டீசர் வரும் டிச.23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
The film crew has announced that the shooting of the film Sigma, directed by Jason Sanjay, has been completed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.