ராதிகாவின் தாய் கிழவி டீசர்!
தாய் கிழவி டீசர் வெளியானது...
சிவகார்த்திகேயன் தயாரித்த தாய் கிழவி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் கனா முதல் ஹவுஸ் மேட்ஸ் வரை இதுவரை 8 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது, பேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
Advertisement
Advertisement
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தாய் கிழவி எனப் பெயரிட்ட இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். ஊரில் கம்பீரமாக இருக்கும் வயதான பாட்டியான ராதிகாவைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது.
டீசர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படம் அடுத்தாண்டு பிப். 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.