ஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்படத்தின் டீசர்!
ஏன் என்னை ஏதோ செய்தா திரைப்படத்தின் டீசர் வெளியீடு...
ஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், உணர்வுகளும் காதலும் கலந்த மனதை வருடும் கதையாக உருவாகியுள்ளது.
ஒளியும் ஒலியும் இணைந்து பழைய காதல் கதைகளின் அழகை தக்கவைத்துக் கொண்டே, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுவுக்கு அடிமையாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு காதல் அவனது வாழ்க்கையில் நுழைகிறது. அந்த காதல் அவனை எப்படி முழுமையாக மாற்றி, தனிமை மற்றும் இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி அழைத்துச் செல்கிறது என்பதே படத்தின் மையக்கரு.
இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, முழுப் படமும் லைவ் சவுண்டில் (Live Sound) உருவாக்கப்பட்டிருப்பதுடன், அனைத்து பாடல்களும் நேரடி இசைக்கருவிகளைக் கொண்டு (Live Instruments) பதிவு செய்யப்பட்டுள்ளன. இது திரைப்படத்திற்கு இயல்பான ஒலியமைப்பையும் தனித்துவமான அனுபவத்தையும் வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Anthony’s Atelier நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
The teaser for the movie 'Yen Ennai Edho Seithai' has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.