விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முத்துக்குமரன்!
பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளரான முத்துக்குமரன், விஜய் சேதுபதியை நேரில் சென்று சந்தித்தார்.
பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளரான முத்துக்குமரன், நடிகரும் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான விஜய் சேதுபதியை நேரில் சென்று சந்தித்தார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் முத்துக்குமரன் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற போட்டியாளர்களில் முத்துக்குமரன் மட்டுமே விஜய் சேதுபதியை அவரின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் முத்துக்குமரனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
இந்த சீசனில் முத்துக்குமரன் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக செளந்தர்யா இரண்டாவது இடத்தையும் வி.ஜே. விஷால் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போட்டியாளர்கள் பலர் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நட்பைத் தொடர்ந்து வருகின்றனர். குழுவாக பயணங்கள் செல்வது, அடிக்கடி சந்தித்துக்கொள்வது என அதற்கான புகைப்படங்களையும் பதிவேற்றி வந்தனர்.
இதனிடையே வெளிநாட்டுப் பயணங்களில் மிகவும் தீவிரமாகியிருந்த முத்துக்குமரன் , தற்போது விஜய் சேதுபதியை அவரின் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தார். அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள முத்துக்குமரன், யாரையும் கண்டு வியக்காதே என்று பாடம் சொன்ன மனிதரை வியந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். 10 நிமிடத்தில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பாதையை திட்டமிட்டுக் கொடுத்த மேதை வேறு எப்படிப் பார்ப்பது என வியந்து பாராட்டியுள்ளார்.
விஜய் சேதுபதியை சந்தித்த முத்துக்குமரனுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.