விடாமுயற்சி ஓடிடி அப்டேட்!
விடாமுயற்சி ஓடிடி வெளியீடு குறித்து..
விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால் சாதாரண கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். கதையாக அவருக்கு நல்ல படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் விடாமுயற்சி அதிருப்தியை அளித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: குட் பேட் அக்லியில் சிம்ரன்!
இப்படம் வணிக ரீதியாக உலகளவில் ரூ. 140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் மார்ச் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.