FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 8: ஜாக்குலின், செளந்தர்யாவை விமர்சித்த சுனிதா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மீண்டும் நுழைந்துள்ள சுனிதா, ஜாக்குலினையும் செளந்தர்யாவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Updated On : 7 ஜனவரி 2025, 4:59 pm IST
ஜாக்குலின், செளந்தர்யா - படம் | எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மீண்டும் நுழைந்துள்ள சுனிதா, ஜாக்குலினையும் செளந்தர்யாவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தீபக்கை முழுமனதுடன் பாராட்டிய சுனிதா, ஜாக்குலினையும் செளந்தர்யாவையும் விமர்சித்தது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மஞ்சரி, ராணவ் ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வெளியேற்றப்பட்டனர். இதனால் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் எஞ்சியிருந்தனர். இதில் ரயான் நேரடியாக பிக் பாஸ் இறுதிப் போட்டியாளராகத் தகுதி பெற்றார்.

Advertisement

Advertisement

முத்துக்குமரன், தீபக், வி.ஜே. விஷால், அருண் பிரசாத், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் எஞ்சியுள்ளனர்.

இந்நிலையில் போட்டியை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சுனிதா, ஜாக்குலினை நோக்கி கடுமையாகப் பேசியுள்ளார். சுயநலம் கருதி வாரம் ஒருவருடன் பயணிப்பதை சுட்டிக்காட்டி, இந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கு துணை தேவைப்படுகிறது என்றால் அது உனக்குத்தான் என ஜாக்குலினை நோக்கிக் கூறுகிறார்.

யாருக்கு வாக்கு சதவீதம் அதிகம் இருக்கிறதோ அவர்களுடன் பயணிப்பதுதான் ஜாக்குலினின் குணம் என விமர்சிக்கிறார்.

போட்டியாளர்களுடன் சுனிதா - படம் | எக்ஸ்

இதோடு மட்டுமின்றி செளந்தர்யாவை நோக்கிப் பேசிய சுனிதா, இந்த நிகழ்ச்சிக்காக நீங்கள் செய்தது என்ன? உன்னுடைய பங்களிப்பு என்ன? எனக் கேள்வி எழுப்புகிறார். இதனால் செளந்தர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களிலேயே வெளியேறிய சுனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீடித்துவரும் இருவரை கொஞ்சம் கூட பாராட்டாமல், முழுவதும் விமர்சிப்பது ஏற்புடையதல்ல என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் வெற்றியாளர் பெண்தான்; முத்துக்குமரன் அல்ல: ஜெஃப்ரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments