முகப்பு
செய்திகள்

மீண்டும் பகிரப்பட்ட மத கஜ ராஜா டிரைலர்!

மத கஜ ராஜா புதிய டிரைலர்...

Updated On : 7 ஜனவரி 2025, 12:02 pm IST
பகிர்:

விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தின் புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.

ஆனால், அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: மெட்ராஸ்காரன் டிரைலர்!

தற்போது, இப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் வெளியீடாக ஜன. 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் பழைய டிரைலரை மீண்டும் வெளியிட்டுள்ளனர். நடிகர் சந்தானத்தின் காமெடி மற்றும் விஷாலின் ஆக்சன் காட்சிகள் சுவாரஸ்யத்தை தருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments