இந்திரா முதல் பாடல் ரிலீஸ் தேதி!
நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் அப்டேட்...
வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
கடைசியாக வெப்பன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
தற்போது, ஜேஎஸ்எம் மற்றும் எம்பெரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இந்திரா எனும் படத்தில் நடித்துள்ளார்.
இந்திரா படத்தை அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கியுள்ளார்.
தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை மெஹ்ரின் பிர்ஜாடா நாயகியாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் அஜ்மல் தக்ஷின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படம் ஆக. 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
The release date of the first song of the film Indira starring Vasanth Ravi has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.