முகப்பு
செய்திகள்

சுந்தரி தொடர் நாயகிக்கு குழந்தை பிறந்தது!

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Updated On : 6 மே 2025, 10:47 am IST
பகிர்:

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் அறியபட்டவர் நடிகை கேப்ரியல்லா.

தொடர்ந்து டிக் டாக்கில் விடியோவில் வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலமான இவருக்கு, திரைத்துறையில் வாய்ப்புக் கிடைத்தது. நயன்தாராவின் ஐரா, காஞ்சனா - 3, கபாலி உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, சுந்தரி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் கேப்ரியல்லா. சுந்தரி தொடரின் முதல் பாகத்துக்கு மக்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு அண்மையில் நிறைவடைந்தது.

முன்னதாக, நடிகை கேப்ரியல்லா தான் கருவுற்று இருப்பதாக தெரிவித்து அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவருடைய பதிவில், “மகளே, உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே…இவ்வுலகம் உனக்கானது மகளே.

சித்ரா அம்மா, மருத்துவர்கள் செவிலியர்கள் இன்றி சுக பிரசவம் சாத்தியம் இல்லை, என் மீது அன்பைக் கொட்டி குடுக்கும் எனது மக்களின் பிராத்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள்.

கேப்ரியல்லா.

இந்த தருணத்திற்காக காத்து கொண்டு இருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிராத்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டி கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை கேப்ரியல்லாவுக்கு குழந்தை பிறந்துள்ளதையொட்டி அவருக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.