முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதியின் ஏஸ் டிரைலர்!

ஏஸ் டிரைலர் வெளியானது...

Updated On : 11 மே 2025, 12:08 pm IST
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது.

தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

Advertisement

இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி. ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள அவரது 51-வது படம் ஏஸ் (Ace).

இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், யோகி பாபு பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். ஏஸ் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.