ஓடிடியில் விஷ்ணு விஷாலின் ஆர்யன்!
நடிகர் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து...
நடிகர் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படம் தற்போது ஓடிடியில் பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், இறுதியாக நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ”கட்டா குஸ்தி” எனும் திரைப்படம் வெளியானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ”லால் சலாம்” மற்றும் ”ஓஹோ எந்தன் பேபி” ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படமான “ஆர்யன்” கடந்த அக்டோபர் 31-இல் வெளியானது.
இந்தப் படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
Actor Vishnu Vishal's film 'Aaryan' is currently released on OTT in pan-Indian languages.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.